படிய வைத்து வாரிய தலை முடி, நெற்றியில் திருநீர் , கையில் கூடைப்பையுடன் சென்ற நாட்கள். உண்மைல்யிலே அனைவருக்கும் மறக்க முடியாத சுவாரசியமான நாட்கள் தான் அந்த பள்ளிகூட நாட்கள். எதற்காக பள்ளி செல்கிறோம் என்றே தெரியாமல் நானும் சிறுது பயத்துடன் விருப்பமின்றி சென்றேன்.ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர் நம்மை கேள்வி கேட்டு விடுவாரோ என்ற பயம் , வகுப்பு இடைவேளை நேரத்தில் நண்பர்களுடன் விளையாட்டு , மரத்தடியில் மதிய உணவு , அப்புறம் மறுபடியும் விளையாட்டு என நேரம் போவதே தெரியாது. கிளாஸ் டைம் ல ராஜா ராணி விளையாட்டு , கோடு போட்டு கட்டம் சேத்தி இனிஷியல் போட்டு விளையாடறது பி.டி பீரியட்ல விளையாட தெரியாமல் மாறி மாறி உதைத்து கால் பந்து விளையாடறது . படிக்க இஷ்டம் இருக்காது , படித்தது ஞாபகமும் வராது, பக்கத்துக்கு பையனை பார்த்து
எழுதவும் பயமா இருக்கும் (மாட்டிகுவமோ என்ற பயத்தில் ).மார்க் கம்மியா வாங்கனதுக்காக ரெண்டு அடி ,பக்கத்துக்கு பையன் அதிகமா மார்க் வாங்கிருந்தா சின்னதா ஒரு பொறாமை இருக்கும்,இதுக்கு நடுவுல டியூஷன் கட் அடிச்சிட்டு ஸ்கூல் கிரௌண்ட் ல விளையாட்டு , இப்படியே காலம் போயிட்டு இருந்துது. ஒன்பதாவது கிளாஸ் வந்தப்ப எல்லாரும் பயப்படுத்த ஆரம்பிச்சாங்க, பத்தாவதை விட இது தான் கண்டம்ன்னு .அப்ப தான் லைட்டா எனக்கும் படிப்பு மேல லைட்டா அக்கறை வந்தது.எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா அப்படிங்கற மாதிரி கொஞ்சம் கஷ்ட பட்டு படிக்க ஆரம்பிச்சேன். எப்படியோ நல்ல மார்க்கோட பாஸ் பண்ணி பத்தாவது வந்தேன்.
திருப்பு முனை :
மறுபடியும் வீட்ல அட்வைஸ் , பத்தாவதுல வாங்கற மார்க் வச்சு தான் நல்ல குரூப் போக முடியும் , வாழ்கைய தீர்மானிகிறது இந்த வருஷம் தான் , அது இதுன்னு ஒவ்வருத்தரும் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாங்க . விடிய காலம் 4 மணிக்கு எந்திருச்சு படிக்கறது , நைட் 10 மணி வரைக்கும் படிக்கறதுன்னு போயிட்டு இருந்துச்சு . நாம மத்த பசன்கள பாத்து எழுதின காலம் போய், நம்ம பேப்பர் பார்த்து மத்தவங்க எழுத ஆரம்பிச்சாங்க.நமக்கும் ஒரு இமேஜ் உருவாச்சு . எப்படியோ கஷ்டப்பட்டா பலன் கிடைகும்ங்க்றது உண்மையாச்சு .ஸ்கூல் ல 2 அவது வந்தேன் .இனிமேல் நானா படிக்க வேணாம்னு நினைச்சா கூட அது நடக்கல . எல்லாரும் ஸ்கூல் செகண்டுன்னு (2 ) கூப்ட நமக்கும் அது புடிச்சிருந்துச்சு . ஒரு தடவ நல்ல பேரு வாங்கிடோம்னு இன்னும் நிறைய அதே மாதிரி பண்ணனும்னு எல்லோரும் நினைபாங்க , நானும் அப்படி தான் .
இதே புராணம் 2 வருஷம் போச்சு 11 , 12 முடிஞ்சு ரிசல்ட் வந்தது . மறக்க முடியாத தருணம் ஸ்கூல்ல முதலாவதா வந்தேன் , இடைல நிறைய சந்தோசமான , சோகமான நிகழ்சிகள் , எப்படியோ இன்ஜினியரிங் சேந்தாச்சு .
ஸ்கூல் லைப் ல தப்பு செய்ய நிறைய ஆப்ஷன் இருந்துருக்கும் ஆனா நமக்கு அந்த வயசில ஒன்னு தெரியாது இல்லேன்னா, அத பண்ண பயமா இருக்கும் . நல்ல நண்பர்கள் ஆனா பத்தாவது படிக்கற வரைக்கும் பிரான்ட்ஷிப்ன்னா என்னனு கூட தெரியாது . இப்ப தான் அந்த நல்ல நண்பர்கள மிஸ் பண்ணிடமொன்னு தோணும் . காலைல ஒரு டைம் தான் அட்டனன்ஸ் எடுப்பாங்க , இப்ப தான் தோணுது , ச்சே நிறைய பீரியடு கட் அடிசுருக்க்கலாம்னு .அப்பா கையெழுத்து நல்ல போடுவோம் இப்ப , ஆனா அப்பவே இதெல்லாம் பண்ணலயேன்னு தோனும், இந்த மாதிரி நிறைய .
எந்த ஒரு நோக்கமும் இல்லாம பள்ளி கூடம் போய் , டீச்சர் , அப்பா அம்மா அடிக்கறாங்கன்னு படிக்க ஆரம்பிச்சு , விளையாட்டே கதின்னு இருந்து , தப்பு எப்படி செய்யறதுன்னு தெரியாம மாட்டிகிட்டு , வந்தோம் விளையாண்டோம் பேசினோம்னு ஜாலியா போன நாட்கள் உண்மையாலுமே ஒரு வசந்த காலம் தான்